அபிதாப் சார்..நான் பண்ணது தப்பு..என்ன மன்னிச்சிடுங்க..வைரல் சிறுவன் இஷித் பட் கதறல்..
அமிதாப் பச்சன் - குரோர்பதி
பாலிவுட்டில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அமிதாப் பச்சன், தற்போது கெளன் பனேகா குரோர்பதி என்ற வினாடி - வினா நிகழ்ச்சியின் 17வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். 10 வயதுக்கு உட்பட சிறுவர் சிறுமிகள் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியின் சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன், இஷித் பட் இணையவாசிகளால் மிகவும் வெறுக்கபப்ட்ட சிறுவன் என்ற அடையாள பட்டத்தை பெற்றுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த வயதில் சிறுவன் வெளிப்பத்திய தன்னம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், அவனது அணுகுமுறை, துடுக்கான பதில்கள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது. தனக்கு முன் ஜாம்பவான் அமர்ந்திருப்பதை நினைக்காமல் சிறிதும் மரியாதை கட்டாமல், தன் வயதுக்கு மீறி திமிரோடு அவன் நடந்து கொண்டதையும் பலரும் விமர்சித்து வந்தனர்.
நான் பண்ணது தப்பு
இந்நிலையில், இஷித் பட் இதுகுறித்து மன்னிப்பு கேட்டு ஒரு பதிவினை பகிர்ந்துளார். அதில், கெளன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் பேசிய விதத்தால் பலர் காயமடைந்து இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.
ஒரு நிகழ்ச்சியில்
என் அணுகுமுறை தவறானது. திமிராக நடந்து
கொள்வது என் நோக்கம் அல்ல, அமிதாப் பச்சன்
சாரையும் கெளன் பனேகா குரோர்பதி குழுவினரையும்
நான் மதிக்கிறேன். என் தவறிலிருந்து ஒரு பெரிய
பாடத்தை கற்றுக்கொண்டே, இனி நான் மிகுந்த
பணிவாக நடந்து கொள்வேன் என்று அந்த சிறுவன்
தெரிவித்துள்ளான்.