கீர்த்திக்கு திருமணமா? மன்மதலீலை நடிகருக்கு மனைவியாகும் அருண் பாண்டியன் மகள்..
பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருக்கிறார். அவர் ஹீரோயினாக தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களில் நடித்தார்.
அதன் பிறகு தற்போது அவர் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. சமீப காலமாக கீர்த்தி பாண்டியன் அதிகம் கிளாமர் காட்டி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் நீச்சல் குளத்தில் எடுக்க கிளாமரான பிகினி உடை போட்டோவை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்தும் வந்தார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன், தமிழில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்து வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இருவரின் திருமணம் நெல்லையில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடக்கவும் இருக்கிறதாம்.