அதை எங்க வீட்டுக்கு வந்து நீங்க பாத்தீங்களா!! பயில்வானை ஓடவிட்ட அசோக் செல்வன் மனைவி கீர்த்தி..

Ashok Selvan Bayilvan Ranganathan Tamil Actress Keerthi Pandian
By Edward Dec 13, 2023 04:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயங்களை பற்றி பேசி வருகிறார் பயில்வான். அவர் பேசும் வீடியோவை பார்த்து பல பிரபலங்கள் கண்டித்து கருத்துக்களை கூறியும் சண்டை போட்டும் வந்தனர். சமீபத்தில் கூட அசோக் செல்வன் திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியனை வம்புக்கு இழுத்திருக்கிறார் பயில்வான்.

சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் அசோக் செல்வன் நடித்து சபா நாயகன் படமும் கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதுதான் காரணம். இரு நாட்களில் வெளியாவுள்ள நிலையில் கண்ணகி படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது.

அதை எங்க வீட்டுக்கு வந்து நீங்க பாத்தீங்களா!! பயில்வானை ஓடவிட்ட அசோக் செல்வன் மனைவி கீர்த்தி.. | Keerthi Pandian Nose Talk Bayilvan Controversy

அப்போது பயில்வான் ரங்கநாதனும் கலந்து கொண்டு இடையில் குறுக்கிட்டு கீர்த்தி பாண்டியனிடம் எடக்குமுடக்கான கேள்வியை கேட்டிருக்கிறார். கண்ணகி நல்லவளா? கெட்டவளா என்று படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு இயக்குனர் படத்தை பார்த்து தான் தெரியும், பொது கருத்து நிறைய இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அதைதொடர்ந்து பேசிய பயில்வான், வீட்டில் தான் கணவன் மனைவி சண்டை என்றால், இப்பவும் இந்த வாரம் உங்க கணவர் படம் ரிலீஸ் ஆகுது என்ன படம் ஜெய்க்கும் என்றும் கேட்டிருக்கிறார்.

40 பொண்ணுங்கள திருப்திப்படுத்துவேன்!! காதலியை பிரிந்ததும் பப்லு கொடுத்த பதிலடி...

40 பொண்ணுங்கள திருப்திப்படுத்துவேன்!! காதலியை பிரிந்ததும் பப்லு கொடுத்த பதிலடி...

அதற்கு கீர்த்தி பாண்டியன், சார் நீங்க எங்க வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா நாங்க சண்டை போட்டதை, போட்டியும் இல்லை சண்டையும் இல்லை.. அது என் வீட்டில் இருக்கும் என்றும் ரெண்டுமே வெற்றி பெறணும், எங்க வீட்டுக்காரர் படம் பார்த்துவிட்டாரா என்று கேட்டதற்கு படத்தை பார்த்துட்டாரு நல்ல இருக்குன்னு சொன்னாரு என்று கீர்த்தி பாண்டியன் கூறியிருக்கிறார். அப்படி அவர் பேசிய அடுத்த நிமிடம் பயில்வான் அந்த இடத்தில் இருந்து விலகிவிட்டார்.