உடல் அமைப்பு குறித்து மோசமான கமெண்ட்!! கீர்த்தி சுரேஷ் கொடுத்த மாஸ் பதிலடி..
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
குறுகிய காலத்தில் கீர்த்தி சுரேஷ் பாப்புலர் நடிகையாக மாறினாலும் மற்ற நடிகைகளை அதிக ட்ரோல்களை சந்தித்தவர் இவர் தான். அண்ணாத்த படத்தின் சமயத்தில் கீர்த்தி சுரேஷ் மெலிந்து இருந்தாலும் பலரும் உருவ கேலி செய்தார்கள்.
இந்நிலையில் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது இன்ஸ்டகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், என்னுடைய அம்மா, அப்பாவிற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்தில் நானும் இல்லை.
சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தாலும் இப்போது தொடங்கியது போல் தான் இருக்கிறது. இன்னும் நிறைய தூரம் பயணிக்கவேண்டும்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிக மிகப் பெரிய நன்றி. ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்கள் ட்ரோல்கள் தான் என்னுடைய சினிமா வளர்ச்சிக்கு உதவியது என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.