கிளாமரை ஒரு போதும் நான் மறுத்ததில்லை.. என்ன மேடம் இப்படி சொல்லிடீங்க

Keerthy Suresh
1 மாதம் முன்
Kathick

Kathick

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் சாணி காயிதம், சர்க்காரு வாரி பாட்டா ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சமீபத்தில் கிளாமர் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதில் அவர் கூறுகையில், " கிளாமர் வேடங்களில் நடிப்பதற்கு நான் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால் கிளாமர் குறித்து நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கிளாமர் என்றால் அழகு. ஆனால் அதை கவர்ச்சி என்று தவறாக புரியவைத்துவிட்டோம்.

மேலும் " உடம்பை காண்பிக்கும் ஆடைகளை நான் அணிய மாட்டேன். என்னை அழகாக காட்டும் ஆடைகளையே அணிவேன். முக்கியமாக ஆடையுடன் கூடிய கிளாமரை வெளிப்படுத்துவேன் என்பதுதான் எனது கருத்தாக இருந்தது. கிளாமர் வேடம் என்பதற்காக ஆடை குறைத்து நடிப்பேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை " என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.