மதுபோதையில் கீர்த்தி சுரேஷிடம் அத்துமீறிய மர்ம நபர்!! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 08, 2024 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபகாலமாக இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மதுபோதையில் கீர்த்தி சுரேஷிடம் அத்துமீறிய மர்ம நபர்!! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Keerthy Suresh Attacked By Drunken Person In Night

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், நானும் என்னுடைய தோழியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் குடிகாரன் என் மீது மேல் கைபோட்டான். அப்போதே அந்த நபர் கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்டு வந்துவிட்டேன்.

அதன் பின் அந்த நபர் என் தலையில் அடித்துவிட்டு வேகமாக ஓடினான். எனக்கு சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே புரியவில்லை. நானும் என் தோழியும் சேர்ந்து அவனை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்துவிட்டோம் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.