ஒருவேல அப்படி இருக்குமோ!! இந்த ஆண் நண்பரை தான் கீர்த்தி சுரேஷ் காதலிக்கிறாரா..வைரல் புகைப்படம்
மலையாள பெண்ணாக தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் 2015ல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றாலும் அவர் நடித்து பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார்.
குடும்பபாங்கான ரோலில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படி கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பரான Farhan Bin Liaquath என்பவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தில் இருப்பவர் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக பணியாற்றும் கீர்த்தியின் நீண்ட நாள் நண்பராம்.
ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், அவரது நீண்டநாள் நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார் என்று பத்திரிக்கையாளர்கள் கூறி வந்த நிலையில், புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், ஒருவேலை அப்படி இருக்குமே என்று காதலராக இருப்பாரோ என்றும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

