மகனுடன் நடனமாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதுவும் திருமண பாட்டுக்கு

son keerthy suresh dance video tum tum
By Karthick Raja Nov 21, 2021 01:25 PM GMT
Report

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னனி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், மலையாள படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக இவர் நடித்து வெளிவந்த அண்ணாத்த திரைப்படம், குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் செல்லப்பிராணியான நாயுடன் நடனமாடும் விடியோவை பதிவிட்டிருக்கிறார்.

நைக்கி என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த குட்டி நாயை, தனது மகன் என்று கீர்த்தி சுரேஷ் கூறி வருகிறார். இந்நிலையில் அந்த நாய் குட்டியை தன் மடியில் வைத்துக்கொண்டு சமீபத்தில் வெளியான எனிமி படத்தில் இடம்பெற்றிருக்கும் tum tum பாடலுக்கு அமர்ந்தபடியே நடனம் ஆடுவதுபோல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.