ப்ளீஸ்.. தயவு செய்து இந்த மாறி சொல்லாதீங்க.. கிசு கிசுப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷின் தந்தை
Keerthy Suresh
Gossip Today
Actors
Tamil Actors
By Dhiviyarajan
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திற்கு பின் இவருக்கு பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு குவிந்தது. அதை சரியாக பயன் படுத்திய கீர்த்தி சுரேஷ் தனக்கென பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ், பர்ஹான் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை, கீர்த்தி சுரேஷ் மற்றும் பர்ஹான் இருவருமே நண்பர்கள்.எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். தயவு செய்து இது போன்ற தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.