முதல் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.. தலைசுற்றிப்போன ரசிகர்கள்

Keerthy Suresh
By Kathick Jan 09, 2023 03:17 AM GMT
Report
265 Shares

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இது தவிர சில தெலுங்கு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களிலும் தொடர்ந்து அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கவர்ச்சி காட்டாத உடைகளை மட்டுமே அணிந்து வந்தார் கீர்த்தி. ஆனால், சமீபகாலமாக கிளாமர் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ள கீர்த்தி அதை படங்களிலும் செய்து வருகிறார்.

ஆம், கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த சர்க்காரு வாரி பாட்டா எனும் படத்தில் சற்று கிளாமர் தூக்கலாகவே கீர்த்தி நடித்திருந்தார். படங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம கீர்த்தி சுரேஷா இது இப்படி மாறிவிட்டாரே என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு முதல் முறையாக நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப்போய் உள்ளார்கள். கீர்த்தி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGalleryGallery