டப்பிங் எல்லாம் நல்லா தான் இருக்கு? கீர்த்தி சுரேஷ் வீடியோவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..
Keerthy Suresh
Indian Actress
By Jai
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மலையாள பெண்ணாக அறிமுகமாகி நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படத்திற்கு பிறகு அடுத்தத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் மகாநிதி படத்தின் மூலம் தேசிய விருதினையும் கைப்பற்றினார். அப்படி இருந்தாலும் மீதம் நடித்த படங்கள் ரசிகர்களை கவராமல் விமர்சனத்தையே சந்தித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் அவர் நடித்த பாதி படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும் நல்ல விமர்சனத்தை பெறாமல் வந்தது.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர போட்டோஷூட்டினை வெளியிட்டு வரும் சூழலில் டப்பிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தற்போது இதை கலாய்த்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.