என்ன சிம்ரன் இதெல்லாம்!! ஸ்கூல் சிறுமியாக மாறி போட்டோஷூட் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh Mahesh Babu
By Edward May 13, 2022 06:47 PM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரியளவில் வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்ட்டில் இணைந்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமான அவர் நடித்த படங்கல் தோல்வியை சந்தித்தே வந்துள்ளது.

அப்படி சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்கார் வாரிபாட்டாவும் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு எடுபடவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் க்ளாமர் ரோலுக்கு தாரளம் காட்டி வரும் கீர்த்தி குட்டையாடையில் ஸ்கூல் சிறுமியை போல் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.