வாய்ப்பில்லை என்று இப்படியொரு ஆட்டத்தை ஆட ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்? இந்த போஸ் போதுமா.
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் பெரியளவில் பேசப்படாமல் போன கீர்த்தி மலையாளப்படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்தினை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார்.
அவர் நடித்த ஒருசில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தது. பின் மகாநடி என்ற படத்தில் நடிகையர் திலகமாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றும் தேசிய விருதினை பெற்றும் புகழப்பட்டார்.
அதன்பின் அண்ணாத்த படத்தில் தங்கை ரோலில் நடித்து மார்க்கெட்டை இழக்க ஒரு காரணமாக அமைத்துக்கொண்டார். சமீபத்தில் சர்கார் வாரி பாட்டா, வாஷி போன்ற படங்கள் ஓரளவிற்கு கீர்த்தி சுரேஷுக்கு ஸ்கோப் கொடுத்தும் சாணி காயிதம் படம் சூப்பர் ஹிட் கொடுத்தும் வந்தது.
தற்போது போதிய வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் க்ளாமர் ரூட்டினை பிடித்துள்ளார். அதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு போட்டோஷூட்டிற்கு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸில் புகைப்பட தொகுப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.