ஒருவேல இருக்குமோ!! விஜய் மேனேஜருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்த புகைப்படம்..
இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் திகழ்ந்து வந்தார். ஆனால் பல தோல்வி படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தி வந்தார்.
இதற்கிடையில் நடிகர் விஜய்யுடன் ரகசிய காதலில் இருந்து வருவதாக சங்கீதாவை பிரிந்து கீர்த்தி சுரேஷை இரண்டாம் கல்யாணம் செய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியானது.
மேலும் கார் வாங்கி கொடுத்துள்ளார் என்று பலவிதமான செய்திகள் பரவியது. இந்நிலையில் தசரா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் படம் குறித்த பிரமோஷன்களை செய்து வருகிறார்கள்.
தற்போது விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் கல்யாணி பிரியதற்ஷனுக்கு நன்றி கூறியபடி அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தபடி இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.