அங்க போனாங்க அப்படியே மாறிட்டாங்க? குடும்ப குத்துவிளக்கு பேரை கெடுத்து கொண்ட கீர்த்தி

Keerthy Suresh Indian Actress
By Jai Jul 01, 2022 04:57 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள வாரிசு நடிகையாக அறிமுகமாகி வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமானார். அதன்பின் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஆரம்பித்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என நடித்து வரும் கீர்த்தி சமீபத்தில் நடித்த பாதி படங்கள் தோல்வியை தழுவியது. அவர் நடித்த மகாநடி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அதுவும் குடும்ப பாங்கான நடிகை என்ற கலையில் இருந்த கீர்த்தி அக்கடதேசத்து படத்திற்காக சமீபகாலமாக க்ளாமர் ரூட்டினை பிடித்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.

அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து என்ன கீர்த்தி நீங்கள் இப்படி மாறிட்டீங்களே என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.