சில்க் ஸ்மிதாவாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
Keerthy Suresh
By Edward
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படம் சரியான வரவேற்பு கிடைக்காமல் இருந்த கீர்த்திக்கு சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இப்படத்தினை தொடர்ந்து தனுஷ், விஜய், விஷால், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்தில் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார். ஆனால் நடித்து ஒருசில படங்கள் தவிர அவருக்கு தோல்வியையும் கொடுத்தது.
தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் சில்க் ஸ்மிதாவின் ஸ்டைலில் ரியாக்ஷன் கொடுத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரின் எக்ஸ்பிரஷனை யாராலும் செய்ய முடியாது என்று கூறி கலாய்த்தபடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.