10 வருட சினிமா வாழ்க்கை!! விஜய், ரஜினி ஓகே!! கமல், அஜித் பக்கமே சீண்டாத பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாள நடிகை மேனகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடித்து கீர்த்தி, இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் மாறிமாறி நடிக்க ஆரம்பித்து டாப் நடிகையாகினார். குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை தென்னிந்திய சினிமாவில் பெற்றார். ஆனால் இடையில் தோல்வி படங்களில் நடித்தும் ஏமாற்றமடைந்தார்.
தற்போது சைரன், ரகுதாதா, ரிவால்வர் ரீடா, கண்ணிவெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்றோரு கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை நினைத்து பெருமையாக வீடியோ பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10 வருட சினிமா வாழ்க்கையில், தமிழில் டாப் நடிகர்களான விஜய், ரஜினி படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், இதுவரை கமல், அஜித் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இருவரின் படத்தில் பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆனால், மகாநடி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். அதேபோல் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.