என்னுடைய வருங்கால கணவர் இவரா!! உண்மையை உடைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Indian Actress Tamil Actress
By Edward May 22, 2023 11:42 AM GMT
Report

மலையாள பெண்ணாக தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் 2015ல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

என்னுடைய வருங்கால கணவர் இவரா!! உண்மையை உடைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Open Her Love Rumour News Viral

அதன்பின் தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றாலும் அவர் நடித்து பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார். குடும்பபாங்கான ரோலில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படி கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பரான Farhan Bin Liaquath என்பவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

என்னுடைய வருங்கால கணவர் இவரா!! உண்மையை உடைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் | Keerthy Suresh Open Her Love Rumour News Viral

அப்புகைப்படத்தில் இருப்பவர் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டாக பணியாற்றும் கீர்த்தியின் நீண்ட நாள் நண்பராம். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ், அவரது நீண்டநாள் நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார் என்று பத்திரிக்கையாளர்கள் கூறி வந்த நிலையில், புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், ஒருவேலை அப்படி இருக்குமே என்று காதலராக இருப்பாரோ என்றும் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதையறித கீர்த்தி சுரேஷ் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், அவர் என் நெருங்கிய நண்பர் என்றும் அவர் என் வருங்கால கணவர் கிடையாது, என் வாழ்க்கை துணை பற்றி நானே கூறுவேன், பொறுமையாக இருங்கள் என்று கீர்த்தி சுரேஷ் ஒரு டிவிட் போட்டுள்ளார்.