முன்னணி ஹீரோவுடன் கிசுகிசுப்படும் கீர்த்தி சுரேஷ்.. உண்மையை உடைத்த அவரின் அம்மா
Keerthy Suresh
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் 2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது கீர்த்தி சுரேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
பதிலடி
கீர்த்தி சுரேஷ் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் முன்னணி நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ் அம்மா, " சினிமாவை பொறுத்த வரை கிசுகிசுக்கள் எழுவது சகஜமான ஒன்று தான். கீர்த்தி சுரேஷ் உண்மையில் காதலித்தால் எங்களுடன் சொல்லப்போகிறார்" என்று கூறியுள்ளார்.