ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படம்!! கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்..
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், தனுஷின் தொடரி போன்ற படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். இதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
ஆனால் அவர் நடித்த ஒருசில படங்களை தவிர மற்ற படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்ததால் ராசியில்லா நடிகை என்று விமர்சிக்கப்பட்டார். அதன்பின் அவர் நடிப்பில் சாணி காயிதம் மற்றும் தசரா படம் நல்ல வரவேற்பு பெற்றது. இடையில் திருமணம், விஜய்யுடன் காதல் என்று பல வதந்தி செய்திகளை சந்தித்து வந்தார்.
எப்போது குடும்பபாங்கான நடிகையாக திகழ்ந்து வந்த கீர்த்தி சமீபகாலமாக கிளாமர் லுக்கிற்கு மாறி ஹாட் போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஆண் நண்பருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேலை அவரா இருக்குமோ என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள். அந்த நபர் பையா உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த நடிகர் தான் என்று கூறி வருகிறார்கள்.
