கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி! மேடையில் மோசமாக உளறிய வீடியோ வைரல்..
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக மலையாள சினிமாவில் காலெடி எடுத்து வைத்த கீர்த்தி ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி மலையாள படமான மரைக்காயர் படத்திலும் நடித்து நல்ல பேர் பெற்றார். தமிழ் தெலுங்கு என வெளியான மகாநதி படத்திற்காக தேசிய விருதினையும் வாங்கிய கீர்த்தி சமீபத்தில் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று வந்துள்ளது.
சாமி, சண்டகோழி 2, சர்கார், மிஸ் இந்தியா, பென்குயின், ராங் தே, அண்ணாத்தம் மரக்காயர், குட்லக் போன்ற தோல்வி படங்களில் நடித்த கீர்த்தி சமீபத்தில் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்திலும் நடித்திருந்தார்.
வசூலிலும் கதையிலும் அடிவாங்கிய இப்படத்தினால் கீர்த்தி மனமுடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. இப்படத்தின் சக்சர்ஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ் சற்று பதற்றத்துடன் காணப்பட்டும் உளறியும் பேசியுள்ளார்.
இதனால் கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ஏன் இப்படி உளறுகிறார் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அவருக்கு ஆறுதலாக சாணி காகிதம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது தான்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக செய்க..