எனக்கு பழகிடுச்சு..கணவர் பழகல..அதான் கஷ்டம்!! கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் படத்தின் மூலம் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்யாக 56 கோடிக்கும் மேல் மட்டுமே வசூலித்து தோல்வி படமாக கீர்த்தி சுரேஷிற்கு அமைந்தது.
இப்படம் ரிலீஸாவதற்கு முன் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை தன் கணவருடன் கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்தார். இந்நிலையில் திருமதி ஆன பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பகிர்ந்துள்ளார்.
எனக்கு பழகிடுச்சு..கணவர் பழகல
அதில், திருமணத்திற்கு பின் எதுவும் மாறியது போல் தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது எனக்கு பழகிவிட்டது. ஆனால் ஆண்டனிக்கு பழக்கமில்லை. அதனால் அவருக்கு சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் எந்த புகாரும் சொல்வது இல்லை.
எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறார் என்று கீர்த்தி சுரேஷ் ஓப்பனாக பேசியிருக்கிறார். மீடியா முன் கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி வர கூச்சப்படுவதால் தான் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று ஓப்பனாக அப்படி கூறியிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.