ஸ்லீப்பிங் பியூட்டியா? கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் இணையவாசிகள்.. வைரலாகும் வீடியோ
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
இவர் நடிப்பில் பேபி ஜான் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளது. கடந்த வாரம் கீர்த்தி, அவர் 15 வருடமாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை கரம்பிடித்தார்.
இவர்கள் திருமணம் கோவாவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில், விஜய், த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு படத்தின் ப்ரோமோசன் பணிகளில் படக்குழுவினருடன் கலந்து கொள்ள கீர்த்தி தொடங்கிவிட்டார். இதில் கழுத்தில் தாலி மட்டும் அணிந்து கலந்து கொண்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீர்த்தி மேக் அப் போட்டுக் கொண்டு இருக்கும்போது களைப்பில், நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கியுள்ளார்.
அதனை அவர் நண்பர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் ஸ்லீப்பிங் ப்யூட்டி என கலாய்த்து வருகின்றனர்.
sleeping beauty 😂❤️@KeerthyOfficial #KeerthySuresh#BabyJohn pic.twitter.com/9asM5Mq368
— Sai Madhu✨ (@KeerthySaimadhu) December 18, 2024