நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடந்த நல்லது!! இனிமேல் அப்படி கூப்பிட முடியாது..
இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. வெளியான முதல் நாளே 17 கோடி அளவில் வசூல் செய்திருக்கிறது தசரா படம்.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் ஸ்கோப்பையும் கொடுக்காமல் இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் தமிழில் பல வாய்ப்புகளையும் இழந்து ராசியில்லா நடிகையாக திகழ்ந்து வந்தார்.
ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷின் உழைப்பிற்கு தக்க சண்மானம் கிடைத்திருக்கிறது. தற்போது கொண்டாடப்பட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் தசரா படத்தினால் உயர்ந்துள்ளதால் நல்லது நடந்துடுச்சு கீர்த்தி சுரேஷ் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இனிமேல் கீர்த்தி சுரேஷ் வேறொரு ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று தென்னிந்திய வட்டாரத்தில் புகழப்பட்டு வருகிறார்.