சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கும் கீர்த்தி சுரேஷ்! மாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்கள்

Keerthy Suresh Indian Actress
By Edward Nov 25, 2022 01:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை அடுத்து ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமானார்.

இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

அவர் நடித்த பாதிப்படங்களுக்கும் மேல் தோல்வியை சந்தித்து ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் எடுத்த. கடந்த 3 ஆண்டுகளாக மகாநதி படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் தமிழில் வாய்ப்புகளையும் இழந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிப்புக்கு டாட்டா கூறிவிட்டு திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெற்றோர்கள் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதால் கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பில் ஈடுபடவும் இருக்கிறாராம்.