சிம்புவுக்காக 30 கோடி சம்பளம் கேட்ட நடிகை!! வேண்டாம்ன்னு அந்த நடிகையை புக் செய்த கமல்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு பல்வேறு சறுக்கல்களுக்கு பின் மாநாடு படத்தின் மூலம் தன்னுடைய கம்பேக் படத்தினை கொடுத்தார். 100 கோடி வசூலை தந்த மாநாடு படத்திற்கு பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தார் சிம்பு.
எஸ்டிஆரின் 48 வது படத்தில் புதிய அப்டெட் சமீபத்தில் வெளியானது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை இயக்கிய தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்கவுள்ளார். கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோனே தான் எஸ்டிஆர்48 படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்காக நடிகை தீபிகா படுகோனே, சிம்புவுடன் ரொமான்ஸ் செய்ய சுமார் 30 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.
ஆனால் இது பேச்சுவார்த்தை தான் சென்று கொண்டிருக்கிறது என்று கூறும் நிலையில் STR48ல் இரண்டு கதாநாயகிகள் இருப்பதால், அதற்காக நடிகை கீர்த்தி சுரேஷை அணுகி இருக்கிறார்களாம் ராஜ் கமல் நிறுவனம்.
தீபிகா அதிக சம்பளம் கேட்பதால் அவருக்கு பதிலாக வேறொருவரை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது என்று கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.