பேசியபடி கார் ஓட்டிய கீர்த்தி சுரேஷ்!! TTF வாசனுக்கு மட்டும் ஒரு நியாயமா..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி என்ற படத்தில் நடித்து தேசிய விருதினையும் பெற்றார்.
அப்படத்தினை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தாலும் சரியான வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் பாலிவுட் படத்தில் அறிமுகமாகியும் நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த கீர்த்தி சுரேஷ், கார் ஓட்டியபடியே பேட்டியளித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவே TTF வாசனாக இருந்தால் கைது செய்திருப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே வீடியோ எடுத்தபடி டிடிஎஃப் வாசன் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டது.
ஆனால் கீர்த்தி சுரேஷ், சீட் பெல்ட் போட்டுள்ளார் என்றும் டிடிஎஃப் வாசனை போல் வீடியோ எடுத்துக்கொண்டே கார் ஓட்டவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.