விஜய்யை ஃபாலோ செய்யும் கீர்த்தி சுரேஷ்!! அவரே கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. படங்களில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து காசு சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ரகு தாத்தா படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், வதந்திகள் குறித்து தான் நினைக்கும் கருத்தினை பகிர்ந்துள்ளார். வதந்திகள் குறித்து விஜய் சார் கூட, உண்மைக்கு விளக்கம் சொன்னால் தெளிவாகும், ஆனால் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மை ஆகிவிடும் என்று சொல்லி இருக்கிறார். அது ரொம்பவும் உண்மை, தேவையில்லாத விஷயங்களுக்கு என்னுடய எனர்ஜியும் விளக்கமும் தரமாட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.