பிரபல நடிகருடன் மாலையும் கழுத்துமாய் நடிகை கீர்த்தி சுரேஷ்.. சூப்பர் ஜோடி என கூறும் ரசிகர்கள்
Keerthy Suresh
Nani
By Kathick
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் தசரா. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து நானி நடித்திருந்தார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு சூப்பராக உள்ளது என்றும் பலருக்கும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தசரா படத்தின் வெற்றியை கீர்த்தி மற்றும் நாணி இருவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதில் கீர்த்தியும், நானியும் ஒரே மாலையை அணிந்திருக்கும் புகைப்படத்தை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.