யூத் படம் பிளாக்பஸ்டர்.. கென் கருணாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Youth (2026)
Ken Karunas
By Karthick Raja
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் யூத். இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.
இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக்குவித்து வருகிறது. சிம்பு, சூர்யா, கார்த்தி போன்ற பல உச்ச நட்சத்திரங்கள் கென் கருணாஸை நேரில் அழைத்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், யூத் படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க கென் கருணாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக கென் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.