ஆள் வைத்து உளவாளி வேலை பார்த்த ஆர்த்தி? ரவி மோகனின் தோழி கெனிஷா...
கெனிஷா
நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்த விவகாரம் கடந்த ஆண்டு முதல் பேசுபொருளாகி வருகிறது. தன்னுடைய தோழியும் பாடகியுமான கெனிஷா பிரான்சிஸுடன் பல இடங்களுக்கு செல்வதையும் பலரும் விமரிசித்து வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக கெனிஷா இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு வீடியோகளை பகிர்ந்துள்ளார்.

அதில், தன்னுடைய முந்தின வாழ்க்கை, அம்மா, அப்பா, குழந்தை இறப்பு என்று பல விஷயங்களை எமோஷனாக பேசியிருக்கிறார் கெனிஷா. மேலும், பெரிய சம்பளத்திற்கு இசை நிகழ்ச்சிகளில் பாடும் நிலைக்கு வந்திருக்கிறேன். இந்த வளர்ச்சிய அடைவதற்காக நான் சமரசங்கள் செய்தேன். யாரும் என்னை குறை சொல்ல முடியாது.
ஆனால் சமீபகாலமாக நடக்கும் நிகழ்வுகள் மூலம் என்னை பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். ஒருவர் எதுவும் பேசவில்லை என்பதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?

உளவாளி வேலை
கடந்த சில மாதங்களில் என்னை எல்லோரும் தாக்குகிறார்கள். என்னை தாக்குபவர்கள் பெங்களூருவிற்கு உளவாளி அனுப்பி என்னுடைய கடந்த காலத்தை விசாரிக்கிறார்கள். எனக்கு யாருடன் திருமணமானது என்பதை அவர்கள் விசாரிக்கிறார்கள். என் தந்தையை நான் ஹோமில் சேர்த்திருப்பதாக செய்தி பரப்புகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னை சுற்றி இருண்ட விமர்சனங்களால் எந்த நிகழ்ச்சியிலும் நான் பாடவில்லை.
இப்படியான சூழலில் கேரளாவில் மீன்குளத்தி அம்மான் கோவில் திருவிழாவிற்கு சென்றிந்தேன். 8000 பேர் அந்நிகழ்வில் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். இது நடந்த அடுத்த நாள் என் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது, அதை யார் ஹேக் செய்தது என்பதை நானும் என் டீமும் கண்டுபிடித்துள்ளோம். ஆனால் அடுத்த நாளே ஆர்த்திக்கு எதிராக நான் பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. அப்படியான ஒரு உத்தரவே எனக்கு வரவில்லை.

இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது. ஒரு அழகான நபர் நமக்கு முதலமைச்சராக கிடைத்திருக்கிறார். மக்கள் எண்ணெய் தட்டுப்பாட்டால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதை எல்லாம் கடந்து ஒருவர் தன் தாழ்வுமனப்பான்மை காரணமாக தன்னை பற்றி எல்லாரும் பேச வேண்டும் என்று நினைக்கிறார்.
தன் பிரச்சனையை தன்னுடைய குடும்பத்திடமோ, சினிமாவை சேர்ந்தவர்களிடமோ சொல்ல முடியாமல் என்னை மாதிரியான ஒரு பெண்ணிடம் வந்து சொன்னார் என்றால், என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் எங்களுகிடையில் இருக்கும் அழகான நட்பை நான் ஏன் முடித்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாததால், உங்களுடன் மற்றவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து ஏன் கீழே இழுக்கிறீர்கள். மீடியா வெளியிட்டது போல் எனக்கு நீதிமன்றத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.