தேவையில்லாமல் இந்த ரெண்டு கேரக்டர்கள் எதுக்கு! இந்த விசயத்தில் கோட்டைவிட்ட கேஜிஎஃப் 2

kgf2 yash beast kgf2review
By Edward Apr 14, 2022 06:30 PM GMT
Report

இந்தியவில் என்ன உலகளவில் மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் கேஜிஎஃப் 2. கொரோனா காரணமாக இந்த ஆண்டும் ஆரம்பத்தில் வெளியாகவிருந்த இப்படம் தள்ளி சென்று இன்று ஏப்ரல் 14ல் வெளியானது. யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தால் தமிழகத்தில் குறைவான தியேட்டர்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் எதிர் விமர்சனங்களால் கேஜிஎஃப் 2 விற்கு தியேட்டர்கள் வரும் காலங்களில் கிடைக்கும்.

2018ல் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த கேஜிஎஃப் படம் தற்போது இரண்டாம் சேப்டரும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதிலும் நடிகர் யாஷ்ன் மாஸ் காட்சிகள் மிகப்பெரியளவில் வெற்றிக்கு கூடுதல் பலத்தினை கொடுத்துள்ளது.

சஞ்சய் தத், ரவினா, ஸ்ரீநிதி ஷெட்டி, அர்ச்சனா ஜாய்ஸ் உள்ளிட்டோர் மாஸ் காட்டிய நிலையில் சில கதாபாத்திரங்கள் தேவையில்லாமல் இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சில ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதில் ஒன்று நடிகர் பிரகாஷ் ராஜின் ரோல். முதல் பாகத்தில் நடிகர் அனந்த் நாக் நடித்திருப்பார். அதிலும் அவருக்கு நடிகர் நிழல்கள் ரவி குரல் கொடுத்தது தான் படத்தின் மிகவும் ஸ்டாங்காக இருந்தது.

ஆனால் பிரகாஷ் ராஜின் ரோலும் படத்தின் கண்டின்யூவிற்கு செட்டாகவில்லை. நிழல்கள் ரவியின் குரல் தான் படத்தினை கதை எடுத்துக்கொண்டு செல்லும். அப்படி அனந்த் ராக் மற்றும் அவரது குரலும் இல்லாமல் இருந்தது ஒரு மைனஸாக கூறி வருகிறார்கள்.

அடுத்தது ஜான் கொக்கைன் கதாபாத்திரம். அவரின் ரோல் முக்கியத்துவமாக படத்தில் காட்சியமைக்கவில்லை. அவருக்கு பதிலாக மற்றவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் இந்த இரு காரணங்கள் தான் படத்தின் மைனஸ் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.