பீஸ்ட்-க்கே பயத்தை காட்டிய கேஜிஎப்2! யாரு சூப்பர்ன்னு அடிச்சி காமிங்கப்பா?
இந்த ஆரம்பத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தமிழகத்தில் ஆரம்பித்து ஊரடங்கு போடப்பட்டதால் படங்கள் எங்கும் வெளியாக தடையாக இருந்தது. பொங்கல் ரேஸில் வெளியாக இருந்த அனைத்து படங்களும் தள்ளி சென்று மார்ச் ஏப்ரல் என்று வெளியாக தேதிகளை மாற்றினார்கள்.
தற்போது மார்ச் மாதம் இரு முக்கிய படங்களின் அறிவிப்பு வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் பீஸ்ட், தெலுங்கு நடிகர் யாஷ்-ன் கேஜிஎப் 2 படம் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 13 பீஸ்ட்-டும், 14ல் கேஜிஎப்2வும் வெளியாக தேதிகளை வெளியிட்டனர்.
பீஸ்ட் படத்திற்கு போட்டியாக கேஎஜிஎப் 2 வருவதை பல தமிழ் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். அதற்கேற்ப பீஸ்ட் படத்தின் பாடல்களை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தின் அனைத்து மொழி டிரைலரும் இன்று வெளியானது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில் இப்படத்தின் டிரைலர் மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.