என் செருப்பு சைஸ் 41!! தவெகவினருக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பூ..
தலைவர் 173 - சுந்தர் சி
கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படத்தினை இயக்க சுந்தர் சி கமிட்டானதாக கடந்த மாதம் ராஜ் கமல் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்தனர்.

இந்நிலையில், தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி, கண்ணியமான முறையில் அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து அரண்மனை 5 மீம்ஸ் மற்றும் ட்ரோல்களைவிட அதிகமான கட்டுக்கதைகள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகை குஷ்பூ
அந்தவகையில், ஒரு நபர் வெளியிட்ட மீம்ஸ் புகைப்படத்தை பார்த்து நடிகை குஷ்பூ கொந்தளித்து பதிலடி கொடுத்து வருகிறார். அப்படி தவெக-வை சேர்ந்த ஒரு நபர், ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து உங்கள் கணவர் சுந்தர் சியின் கதையை பிடிக்கவில்லை என்று தூக்கிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
இந்திய சினிமா உலகம் உங்கள் கணவரை குப்பை தொட்டியில் போட்டுவிட்டார்களே என்று ஒரு கருத்தினை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த குஷ்பூ, என் செருப்பு சைஸ் 41, அடி வாங்கத் தயாரா என்று கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Yen seruppu size 41, adi vaanga thayaara??
— KhushbuSundar (@khushsundar) November 15, 2025