என் இரு மகள்களை சீண்டாதீர்கள்..அழிஞ்சுடுவீங்க!! கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ..

Sundar C Kushboo Actress
By Jai Jul 15, 2026 12:45 PM GMT
Report

நடிகை குஷ்பூ - இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் இரு மகள்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிகளவிலான உருவகேலி, படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வந்தனர். இதற்கு காட்டமாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் குஷ்பூ.

குஷ்பூ

அதில், இது என் குடும்பம், அன்பு நம்பிக்கை, புரிதலின் அடிப்படையில் உருவானது. இன்று நாங்கள் இருக்கும் நிலையை அடைய, நாங்கள் பல போராட்டங்களை சந்தித்தோம். உடல் வருந்தக் கடினமாக உழைத்தோம், ரத்தமும் வியர்வையும் சிந்தினோம்.

என் இரு மகள்களை சீண்டாதீர்கள்..அழிஞ்சுடுவீங்க!! கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ.. | Khushbu Slams Who Body Shaming Her Daughters

சில சமயங்கள் நாங்கள் தடுமாறினாலும் தோல்வியடைந்தாலும், கீழே விழுந்தாலும், மீண்டும் முழு வீச்சோடு போராடி வெற்றி பெறுவதை நிறுத்தவில்லை. எங்கள் குழந்தைகளை மிகுந்த அக்கறையோடு வளர்த்தோம். அவர்கள் வெற்றியால் திசை திருப்பப்படுவதையோ, பிரபலங்களின் குழந்தைகள் என்ற அந்தஸ்தை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

அவர்கள் யார் என்றும் அவர்கள் ஒருபோதும் எந்த சலுகையையும் பெற முயலவில்லை. எங்கள் குழந்தைகளை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். ஒரு தாயாக, யரோ ஒரு அற்ப மனிதர் என் குழந்தைகளை அவமதிக்கவோ, மரியாதை இல்லாமல் நடத்தவோ, வெறும் இரு நிமிட மலிவான விளம்பரத்திற்காக அவர்களை பயன்படுத்திக்கொள்ளவோ நான் அனுமதிக்கமாட்டேன். அது தரம் தாழ்ந்து, நாகரீகமற்றது. அவர்களின் வளர்ப்பையே தெளிவாக பிரதிபலிக்கிறது, அவர்கள் பேசும் அதே மொழியிலும் அதே பாணியிலும் பதிலடி கொடுக்க எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை செய்ய மாட்டேன், என் தாயையும் அவர் எனக்கு அளித்த வளர்ப்பையும் அவமதிக்க நன் விரும்பவில்லை.

என் இரு மகள்களை சீண்டாதீர்கள்..அழிஞ்சுடுவீங்க!! கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ.. | Khushbu Slams Who Body Shaming Her Daughters

நான் அமைதியாக இருக்கிறேன் என்பதால், உங்கள் அருவருப்பான, கேவலமான மனநிலையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு தாயை ஒருபோதும் சீண்டாதீர்கள், நினைவில் கொள்ளுங்கள், ஒரு தாய் காயமடைந்த புலி போன்றவள். தன் குட்டிகளை காக்க அவள் பாய்ந்து தாக்கி அழித்துவிடுவாள். இச்செய்தி என் குழந்தைகளையும் குடும்பத்தையும் பயன்படுத்தி சிலர் பின் தொடர்பவர்களை, கேலி சிரிப்புகளை பெற நினைக்கும் அந்த தரம் தாழ்ந்த நபருக்கானது மட்டும் அல்ல.

இனி பொறுத்துக்கொள்ள முடியாது, இன்று நமக்காக நாமே குரல் கொடுக்காவிட்டால், இந்த மட்டமான மனிதர்கள் நம்மை மிதித்துச் செல்வார்கள். அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், எங்களுக்குள் இருக்கும் வலிமை விலைக்கு வாங்கப்பட்டதல்ல, அது கடின உழைப்பால் ஈட்டப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் சொல்வது இதுதான், உங்களுக்காக நீங்கள் உறுதியாக நில்லுங்கள். மற்றவர்களை உங்களை மதிக்கத்தவறினால், அதைப் பற்றி கவலைப்படாதீர்கள், உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை அவமதிப்பை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்று குஷ்பூ பதிவிட்டுள்ளார்.