பல போராட்டங்கள்...என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம்!!நடிகை யாஷிகா ஓபன் டாக்

Yashika Aannand Tamil Actress Actress
By Jai Jul 15, 2026 08:56 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

பல போராட்டங்கள்...என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம்!!நடிகை யாஷிகா ஓபன் டாக் | Yashika Aanand Open About Life Stuggleing

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, தன்னுடைய வாழ்க்கை குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளேன். மிகவும் கடினமான காலக்கட்டத்தை தாண்டி வந்திருக்கிறேன். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாகவுள்ளது.

அந்த சோதனையான காலத்தில் என்னுடன் உண்மையாக இருந்தவர்கள் யார் என்பதை அறிந்ததே என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.