ஜனநாயகன் படத்தை தப்பா சொல்ல ரூ. 20 ஆயிரம்!! திமுக ஜென்ஸி பணப்பேரம்..
ஜனநாயகன்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. ஆனால் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக்காக பெரியளவில் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்த நிலையில் ஜனநாயகன் படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
போலி விமர்சனம்
இந்நிலையில், ஜனநாயகன் படத்திற்கு போலி விமர்சனம் செய்ய வேண்டும் என்று திமுக ஜென்ஸி என்ற இன்ஸ்டாகிரம் பக்கத்திலிருந்து, சிலரை அணுகியுள்ளனர்.
இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷான் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. ஒரு போலி விமர்சனத்திற்கு ரூ. 20 ஆயிரம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
தான் ஒரு விஜய் ரசிகர் என்றும், தவெக ஐடி விங் துறையில் இருப்பதாகவும் கூறி, தன்னிடம் பேரம் பேசியவரை கெட்ட வார்த்தையில் திட்டினேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் திமுக தரப்பில் இந்த விவகாரத்தை மறுத்து, வேண்டுமென்றே பப்ளிசிட்டிக்காக இப்படி அவதூறு பரப்பப்படுகிறது என்று கூறியிருக்கிறார்கள்.