உடலுறவுக்கு நோ-னு சொன்னா நோ தான்!! இரு தீர்ப்பால் கொந்தளித்த நடிகை குஷ்பூ..
உயர் நீதிமன்றம்
உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் தன் 18 வயது மகளுடன் திருமணமான நேத்ரபால் உறவில் இருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் ரிட் மனுவை தாக்கல் செய்திருர்ந்தார். இவ்வழக்கை விசாரரித்த உயர் நீதிமன்றம், ஆன் வயது வந்த பெண்ணின் சம்மதத்துடன் உறவில் இருப்பது சட்டபடி கிரிமினல் குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மனைவியுடன் இயல்புக்கு மாறான பாலுறவோ அல்லது பாலியல் செயல்களோ பாலியல் வன்கொடுமையாக கருப்படாது என்றும் அத்தகைய சூழலில் மனைவியின் சம்மதம் என்பது ஒரு பொருட்டல்ல என்று குவாலியர் அமர்வு தீர்ப்பளித்தது.
நோ-னு சொன்னா நோ தான்
நீதிமன்றத்தைன் இவ்விரு தீர்ப்பு குறித்து நடிகை குஷ்பு தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், இவ்விரு செய்திகளும் இன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. இது மிகவும் மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் பிற்போக்குத்தனத்தையும் அளிக்கிறது.
நீதிமன்றங்கள், சட்டத்தின் மீது எனக்குள்ள முழு மரியாதையுடன் கேட்கிறேன், இது பெண்களுக்கு வழங்கப்பட்டால், பெண்கள் எங்கிருந்து நீதியை தேடுவார்கள் என்று நான் உண்மையிலேயே வியக்கிறேன். ஒரு பெண்ணிற்கு இயற்கையாகவோ, செயற்கையாகவோ உடலுறவுக்கு வேண்டாம் என்று சொல்ல உரிமையுண்டு.

அவள் வேண்டாம் என்று சொன்னால் அது வேண்டாம் தான். அதை ஆண்கள் மதிக்க வேண்டும், கட்டாயப்படுத்தி நடத்தப்படும் எதுவும் பாலியல் வன்புணர்வாகவே கருதப்பட வேண்டும்.திருமண வாழ்வில் கூட இது பொருந்தும். ஆனால் திருமணமான ஒரு ஆண், திருமணமான நிலையில் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது சரியா? இப்போது இந்த விதி ஆண்களுக்கு மட்டுமானதா? அல்லது பெண்களுக்கும் இதே விதிதானா? இது சட்டப்படி சரி என்றால், பின் ஏன் திருமணம் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு வழங்கப்படும் நீதியின் மீது சட்டங்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் அனுதாபத்தை எதிர்பார்க்கலாம். சட்டங்கள் அவளது கண்ணியத்தையும் நேர்மையையும் பாதுகாக வேண்டும் என்று கடுமையான கருத்தை வைத்துள்ளார் நடிகை குஷ்பூ.
These 2 news make headlines today. And i must say its very disheartening, disappointing and regressive. With all due respect to the courts and law, if this is handed out to women, then i really wonder where women are going to seek justice from. A woman has the right to say NO to… pic.twitter.com/gOjOtZ7fIM
— KhushbuSundar (@khushsundar) March 28, 2026