உங்க வீட்ல இருந்து யாராவது!! ரஜினிகாந்தை அசிங்கப்படுத்திய ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ..
தலைவர் 173
கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் தலைவர் 173 படத்தினை இயக்க சுந்தர் சி கமிட்டானதாக கடந்த மாதம் ராஜ் கமல் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்தனர்.
இந்நிலையில், தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி, கண்ணியமான முறையில் அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து அரண்மனை 5 மீம்ஸ் மற்றும் ட்ரோல்களைவிட அதிகமான கட்டுக்கதைகள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு நபர் வெளியிட்ட மீம்ஸ் புகைப்படத்தை பார்த்து நடிகை குஷ்பூ கொந்தளித்து பதிலடி கொடுத்துள்ளார்.
பதிலடி கொடுத்த குஷ்பூ
நெட்டிசன் ஒருவர், குஷ்புவை ஐட்டம் டான்ஸ் ஆட ரஜினி கேட்டிருப்பார், அதனால் தான் சுந்தர் சி படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று ரொம்பவும் அசிங்கமான முறையில் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.
இதற்கு நடிகை குஷ்பூ, இல்லை.. உங்க வீட்ல இருந்து யாராவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த விஷயம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Ile, unga veetule irundhu yaaravadhu aaduvaikkalamnu nenacho.
— KhushbuSundar (@khushsundar) November 14, 2025