நடிகைக்கு சூர்யகுமார் யாதவ் அனுப்பிய மெசேஜ்..நாங்கள் தொடர்பில் இல்லை!! நடிகை குஷி முகர்ஜி ஓபன்..
குஷி முகர்ஜி
2026 ஆரம்பமாகும் நேரத்தில் டி20 உலககோப்பை தொடரின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இப்படியொரு சிக்கலா என்று கூறும் அளவிற்கு நடிகை ஒருவர் சொன்ன குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு பல கிரிக்கெட்டர்கள் மெசேஜ் அனுப்புவார்கள், அதில் சூர்யகுமார் யாதவ் நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று நடிகை குஷி முகர்ஜி கூறியிருக்கிறார். இதுகுறித்த செய்திகள் பரவி சர்ச்சையாகிய நிலையில் தானே முன்வந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் குஷி முகர்ஜி.
சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்
சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும் இடையே எந்தவிதமான காதல் உறவும் இல்லை, நாங்கள் நண்பர்களாக பேசிக்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குஷி. மேலும், என் பேச்சு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது.

ஒருமுறை போட்டி தோல்விக்கு பின் அவர் என்னிடம் நண்பராக தான் பேசினார். தற்போது நாங்கள் தொடர்பில் இல்லை. இந்த சர்ச்சைக்குப்பின் நான் அவரிடம் பேசவும் இல்லை, என் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தது என்று விளக்கத்தை கொடுத்துள்ளார்.