கர்ப்பமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானி.. கணவர் உடன் இணைந்து வெளியிட்ட அறிவிப்பு
Pregnancy
Kiara Advani
Bollywood
Indian Actress
Actress
By Kathick
பாலிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. இவர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்த நடிகை கியாரா அத்வானி கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி, தான் கர்ப்பமாக இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். தனது கணவர் சித்தார்த் உடன் இணைந்து மகிழ்ச்சியுடன் க்யூட்டாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த நட்சத்திர ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.