குழந்தை பெற்ற 4 மாதத்துக்கு பின் தலைக்காட்டிய நடிகை கியாரா அத்வானி..
கியாரா அத்வானி
பாலிவுட் சினிமாவில் ஃபக்லி, எம் எஸ் தோனி, மெஷின் உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை கியாரா அத்வானி. இதனையடுத்து, தெலுங்கில் Bharat Ane Nenu என்ற படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.
இதன்பின் ரபீர் சிங், குட் நியூஸ், கில்டி, லக்ஷ்மி, ஷேர்ஷா, போல் புல்லையா உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வருகிறார். இதனையடுத்து 2020ல் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை ரகசியமாக காதலித்து வந்தார்.

அதன்பின் இருவரும் கடந்த 2023ல் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 1 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான கியாரா அத்வானி கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பமாக இருக்கும் போது கேம் சேஞ்சர், வார் 2 போன்ற படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
4 மாதங்கள் கழித்து
இந்நிலையில் குழந்தை பெற்ற 4 மாதங்கள் கழித்து கியாரா அத்வானி முதன்முதலாக பொது இடத்திற்கு வந்துள்ளார். ஜீன்ஸ் ஆடையணிந்து க்யூட்டாக அவர் பொது வெளியில் வந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.