அம்பானி யாருன்னே தெரியாது!! கல்யாணத்தில் வைரக்கல்லை தொலைத்த பிரபல நடிகை..
அனந்த் - ராதிகா திருமணம்
உலகின் டாப் கோடீஸ்வரர்களில் பட்டியலில் 17வது இடத்தில் இருக்கும் இந்தியர் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு அவரது இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
2024 ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில் உலகில் இருக்கும் டாப் பணக்காரர்கள் முதல் பிரபலங்கள் வரை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனந்த் - ராதிகா திருமணத்திற்கு ஃபேஷன் இன்ஃப்ளூயன்சரும் பிரபலமான நடிகையுமான கிம் கர்தாஷியன் அவருடைய அக்கா குளோயி கர்தாஷியுடன் கலந்து கொண்டார்.
கிம் கர்தாஷியன்
இந்நிலையில் 'தி கர்தார்ஷியன்ஸ்' ஷோவின் புது எபிசோட்டில் கிம்மும், குளோயியும் இந்தியாவிற்கு சென்றது பற்றியும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டதை பற்றியும் பேசியுள்ளனர். அதில் கிளோய், அம்பானி யாருன்னே எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தெரிஞ்ச காமன் பிரண்ட்ஸ் இருக்கிறார்கள்.
அதில் ஒருவர் ஜுவல்லரி டிசைனரான லோரைன் ஷ்வார்ட்ஸ். அவர்தான் அம்பானி மகன் கல்யாணத்துக்கான நகைகளை டிசைன் செய்திருந்தார். அவர் மூலமாகத்தான் அம்பானி குடும்பம் எங்களை தொடர்பு கொண்டார்கள். கல்யாணத்திற்கு கூப்பிட்டால் வருவீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக வருவோம் என்று சொன்னோம்.
தொலைந்துபோன ஒரு வைரக்கல்
அதன்பின் தான் ஒரு கல்யாண பத்திரிக்கை வந்தது. அதோட வெயிட் மட்டும் 18 முதல் 20 கிலோ இருக்கும். அதை திறக்கும்போதே பாட்டு வந்தது. இதை பார்த்ததும் இந்த கல்யாணத்தை எப்படி மிஸ் பண்ணமுடியும் என்று கிம் கர்தாஷியனும் அவருடைய அக்காவும் கூறியுள்ளனர்.
மேலும் அம்பானி மகன் கல்யாணத்திற்கு கலந்து கொண்டபோது வைர நெக்லஸில் இருந்து ஒரு வைரம் கீழே விழுந்து தொலைந்ததாகவும் எங்கே விழுந்தது, தேடியும் கிடைக்கவில்லையாம்.
அந்த வைரத்தின் மதிப்பு பல லட்சம் வரை இருப்பதால் தொலைந்துபோன ஒரு வைரத்தால் தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாகவும் கிம் கர்தாஷியன் உருக்கமாக கூறியிருக்கிறார்.

