கிங்காங் மகள் திருமணத்திற்கு சென்ற முதலமைச்சர்!! கண்டுக்கொள்ளாத சினிமாத்துறை.. ப்ளூ சட்டை..

Tamil Cinema M K Stalin Marriage Blue Sattai Maran
By Edward Jul 11, 2025 05:44 AM GMT
Report

கிங்காங் மகள் திருமணம்

தமிழ் சினிமாவில் 80களில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருபவர் தான் கிங்காங் என்கிற சங்கர். உயரம் குறித்த ஏளன பேச்சுக்களை கண்டுக்கொள்ளாமல் ரஜினி, கமல், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார் கிங்காங்.

கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகள் கீர்த்தனா - நவீன் திருமணத்திற்காக வரவேற்கை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வழங்கி வந்தார்.

கிங்காங் மகள் திருமணத்திற்கு சென்ற முதலமைச்சர்!! கண்டுக்கொள்ளாத சினிமாத்துறை.. ப்ளூ சட்டை.. | King Kong Daughter Marriage No Cinema Celeb Attend

இன்று கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கு பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்.

கண்டுக்கொள்ளாத சினிமாத்துறை

அவர்களை தொடர்ந்து அதிமுக ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், விசிக தொல் திருமாவளவன், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தனர்.

ஆனால் ஓடோடு நேரில் சென்று பத்திரிக்கையளித்த சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளாததது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனை விமர்சித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.