வீட்டுக்கே சென்று பத்திரிக்கை வைத்தும் வராத நடிகர்கள்..கஷ்டமா இருக்கு!! வருத்தப்பட்ட கிங்காங்..
தமிழ் சினிமாவில் 80களில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருபவர் தான் கிங்காங் என்கிற சங்கர். உயரம் குறித்த ஏளன பேச்சுக்களை கண்டுக்கொள்ளாமல் ரஜினி, கமல், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார் கிங்காங்.
மகள் கீர்த்தனா - நவீன் திருமணம்
கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகள் கீர்த்தனா - நவீன் திருமணத்திற்காக வரவேற்கை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வழங்கி வந்தார். கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கு பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார். ஆனால், முக்கிய சினிமா பிரபலங்கள் கிங்காங் மகள் திருமணத்திற்கு வரவில்லை.
வருத்தப்பட்ட கிங்காங்
இதுகுறித்து கிங்காங் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அதனால் தான் எனக்கு தெரிந்த அனைத்து பெரிய நடிகர்களுக்கும் மகளின் திருமணத்திற்கு நேரில் பத்திரிக்கை வைத்தேன்.
ஆனால் அவர்கள் யாருமே வரவில்லை, அப்படி அவர்கள் வராதது எனக்கு கஷ்டமாக இருந்ததாக கிங்காங் தெரிவித்துள்ளார்.