நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா
இந்திய சினிமாவின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகன் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1986ல் தெலுங்கில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நாகார்ஜுனா. இவர் இதற்கு முன் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இவர்கள் நடிப்பில் குபேரா மற்றும் கூலி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக அனைவரும் இவருடைய 100வது திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தை தமிழ் இயக்குநர் ரா. கார்த்தி என்பவர் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நித்தம் ஒரு வானம் எனும் சிறந்த படத்தை இயக்கியுள்ளார்.
சொத்து மதிப்பு
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நாகார்ஜுனா, தென்னிந்திய அளவில் பணக்கார நடிகர் என்பது உங்களுக்கு தெரியுமா. இவருடைய மொத்த சொத்து மதிப்பு $410 மில்லியன். இந்திய மதிப்புப்படி ரூ. 3500 கோடிக்கும் மேலும் இவருடைய சொத்து மதிப்பு உள்ளது.