என் போட்டோ பார்த்துட்டு ரேட் பேசுறாங்க, அதுக்கும் கூப்புட்டாங்க!.. வெளிப்படையாக பேசிய விக்ரம் பட நடிகை
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பிரபலமானவர் தான் நடிகை கிரண். இப்படத்தை தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
பாப்புலர் நடிகை வலம் வந்த கிரண், சில காரணங்களால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கிரண், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிரண் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பிகினி உடையில் புகைப்படம் பதிவிட்டால் இவ அந்த மாதிரி ஆளுன்னு கமெண்ட் பண்றாங்க. மேலும் சிலர் எவ்ளோ ரேட் என்று கேட்குறாங்க.
பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்தால் அது பாவமா என்ன?
என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கி வச்சிட்டாங்க, இப்பவும் படங்களில் நடிக்க நான் தயார் என்று கிரண் கூறியுள்ளார்.