7 வருடங்களாக ஓடிய சீரியல், 90ஸ் கிட்ஸ் ரசித்து பார்த்த நடிகை! மீண்டும் என்ட்ரி
கோலங்கள்
சன் தொலைக்காட்சியில் 2003ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய சீரியல் கோலங்கள். திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் தேவயானி கதையின் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும், அஜய் கபூர், அபிஷேக், தீபா வெங்கட், சந்திரா என பல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட 7 வருடங்கள் தொடர்ந்து சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
90ஸ் கிட்ஸ் அதிகமாக கொண்டாடிய இந்த சீரியலின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
கோலங்கள் 2
இந்நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என இயக்குனர் திருச்செல்லாம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கோலங்கள் 2 ஸ்கிரிப்ட் ரெடி, ஆனால் தயாரிப்பு நிறுவனத்தினிடம் இருந்து தாமதம் ஆகிறது. கண்டிப்பாக விரைவில் சன் டிவியில் சீரியல் வரும் என்று கூறியுள்ளார்.
குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்!