அந்த கொரியன் பட நடிகை தான் வேண்டும்! அடம்பிடிக்கும் இயக்குநர் சங்கர்! இதுதான் காரணம்?
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் சங்கர். இவர் எடுக்கும் படங்கள் பட்ஜெட்டில் நூறு கோடிகளை தாண்டும். அதுவும் பிரம்மாண்ட செட்கள் அமைப்பது அவருக்கு அத்துபடிதான். அந்த அளவிற்கு அவரின் படங்கள் மிகப்பெரிய வசூலை பெறும் என்பது சந்தேகமில்லை.
இதையடுத்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சங்கரின் பிரமாண்டத்திற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் உருவாக இருக்கிறதாம் ராம்சரண் திரைப்படம். அந்த வகையில் முதல் நாளே தயாரிப்பாளரின் அடி மடியில் கை வைக்கும் விதமாக கொரியன் பட நடிகைதான் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம் சங்கர்.
அந்த கொரியன் நடிகையை ஒப்பந்தம் செய்தால் கண்டிப்பாக பட்ஜெட்டில் இடிக்கும் என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம். அந்த நடிகை மட்டும் படத்தில் சேர்த்தால் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் அடிக்கும் என தயாரிப்பாளரின் மண்டையை கழுவ, அவரும் பணத்தாசையால் ஒப்புக் கொண்டாராம்.
இந்நிலையில் தற்போது கொரியன் பட நடிகை பே சூஜி என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு. சங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாக உள்ளது. முதல்நாளே ஷங்கர் தயாரிப்பாளரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதால் கண்டிப்பாக படம் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க குறித்த பட்ஜெட்டைவிட அதிகமாக செலவாகும் என்கிறார்கள் சக தயாரிப்பாளர்கள்.