அந்த இடத்தில் அடித்தேன், அதுல இருந்து வடிவேலு மாறிட்டாரு.. கோவை சரளா பேட்டி
நடிகை மனோரமா ஆச்சிக்குப் பின் காமெடியில் கலக்கி ரசிகர்களின் மனதில் தனக்கு ஒரு இடம் பிடித்து இருக்கிறார் நடிகை கோவை சரளா.
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான செம்பி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
நடிகர் வடிவேலு, கோவை சரளா காம்போவில் வெளிவந்த காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வடிவேலுவை அடித்து துவைத்தது சும்மா நொங்கு நொங்கு எடுக்கும் காட்சிகள் நாம் பார்த்து இருப்போம்.
அந்த மாதிரி காட்சியை எடுக்கும் போது வடிவேலுவின் வயிற்றில் சரியான அடி விழுந்து விட்டது. அதன் பின்னர் என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே, வலி கடுமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்த நிகழ்வு சற்றும் எதிர்பாராமல் நடந்தது என ஒரே வார்த்தையில் கோவை சரளா கூறியுள்ளார்.
இதையடுத்து வடிவேலு இது போன்ற சண்டை காட்சிகளின் நடிக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக பக்குவமாக நடிக்க ஆரம்பித்தார் என்று கோவை சரளா கூறியுள்ளார்.